சுவிட்சர்லாந்து நாட்டில் பர்தா தடையை அமல்படுத்த உள்ளது. ஜனவரி 1, 2025 முதல் இந்த சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும். இதன் மூலம் புர்கா, நிகாப் போன்ற முகத்தை மூடுவதற்கு தடை விதித்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் இணையும். தேசிய பாதுகாப்பு முதல் சமூக ஒற்றுமை வரை பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது, சுவிட்சர்லாந்தில் முகத்திரையை தடை செய்வதற்கான நடவடிக்கை 2021 இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு செயல்படுத்தப்படும். முன்னதாக, துனிசியா, ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட 16 நாடுகள் பர்தா தடையை அமல்படுத்தியுள்ளன.