குவைத் சிட்டி: குவைத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை 2.9% அதிகரித்து 16.89 லட்சமாக உள்ளது. பெரும்பாலான வெளிநாட்டவர்கள் இந்தியர்கள். ஜூன் மாத நிலவரப்படி, 5,37,430 இந்தியர்கள் அங்கு பணிபுரிகின்றனர். இரண்டாவது இடத்தில் எகிப்தியர்கள், 4.74 லட்சம் பேர் உள்ளனர். குவைத்தில் அரசு துறையில் பணிபுரிபவர்களில் 79.6% பேர் வெளிநாட்டினர். அதே நேரத்தில், தனியார் துறையில் பூர்வீகவாசிகள் குறைவாக உள்ளனர்.