லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா): உலகம் முழுவதும் ரசிகர்களை உருவாக்கிய ‘டார்சான்’ தொலைக்காட்சி தொடரில் டார்ஜான் முக்கிய கேரக்டரில் நடித்த ஹாலிவுட் நடிகர் ரான் எலி (86) காலமானார். அவரது மகள் கிர்ஸ்டன் கசலே, சமூக ஊடகங்களில் மரணத்தை அறிவித்தார். டார்சன் 1966 இல் வெளியான ஒரு தொடர். ரான் எலி 'சவுத் பசிபிக்', 'தி ஃபைண்ட் ஹூ வாக்டு தி வெஸ்ட்' மற்றும் 'தி ரிமார்க்கபிள் மிஸ்டர் பென்னிபேக்கர்' ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார்.
அவர் 1966 இல் NBC தொடரில் டார்ஜான் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். சாகச காட்சிகளை படமாக்கும்போது பலமுறை காயம் அடைந்தார். அவர் 1960-61 இன் 'The Aquanauts', 1966 இன் சாகசப் படம் 'The Night of the Grizzly' மற்றும் 1978 இல் Jurgen Gosler's 'Slavers' ஆகியவற்றிலும் நடித்தார்.