கனடாவின் மிக மோசமான சாலைகள் கல்கரியில் இருப்பதாக நகர சபை அறிக்கை. நகர சபையின் உள்கட்டமைப்பு மற்றும் திட்டமிடல் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், நகரின் பெரும்பாலான சாலைகள் சீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும், பழுதுபார்ப்பதற்கான நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. கல்கரி சிட்டி தற்போது நகர சாலைகளில் ஒரு கிலோமீட்டருக்கு $2,000 செலவழிக்கிறது. ஆனால் எட்மண்டன் மற்றும் மாண்ட்ரீல் போன்ற பெரு நகரங்களை விட இந்த தொகை மிகவும் குறைவு என்று அறிக்கை கூறுகிறது.
அறிக்கையின்படி, நகரின் சாலை நெட்வொர்க்கில் 38 சதவீதம் நல்ல நிலையில் உள்ளது, 36 சதவீதம் அடிப்படையில் நல்ல நிலையில் உள்ளது மற்றும் 26 சதவீதம் மோசமான நிலையில் உள்ளது. போக்குவரத்திற்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்து சாலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதற்கிடையில், கனேடியர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் நகர சாலைகளின் நிலையில் திருப்தி அடைந்துள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.