வெலிங்டன்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஐஸ்கிரீம். மனிதர்கள் ஆண்டுதோறும் சுமார் 15.4 பில்லியன் லிட்டர் ஐஸ்கிரீமை உட்கொள்கிறார்கள்.
ஆனால் ஐஸ்கிரீம் நுகர்வில் முன்னணியில் உள்ள நாடு எது? நியூசிலாந்து தற்போது உலகிலேயே அதிக ஐஸ்கிரீமை பயன்படுத்துகிறது.
ஐஸ்கிரீம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நியூசிலாந்திற்கு வந்தது. இன்று, நியூசிலாந்தில் ஒருவர் ஆண்டுக்கு சராசரியாக 28.4 லிட்டர் ஐஸ்கிரீம் உட்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெர்ரி, சாக்லேட் மற்றும் வெண்ணிலா சுவைகள் மிகவும் பிரபலமானவை. நியூசிலாந்தின் Hokey Pokey சுவை, வெண்ணிலா மற்றும் தேன் கலவையானது, பல ரசிகர்களைக் கொண்டுள்ளது.