மாஸ்கோ: ரஷ்யாவில் 22 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது. ஹெலிகாப்டரில் 19 பயணிகள் மற்றும் 3 பணியாளர்கள் இருந்தனர். ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் ஹெலிகாப்டர் காணாமல் போனதாக பெடரல் ஏர் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
Interfax செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, Mi-8T ஹெலிகாப்டர் காணவில்லை. காசெட்ஸ் எரிமலைக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹெலிகாப்டர் சரியான நேரத்தில் வராததால் இது தெரிய வந்தது.
Mi-8 என்பது 1960 களில் வடிவமைக்கப்பட்ட இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர் ஆகும். ரஷ்யா மற்றும் அண்டை நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் 12 அன்று, ரஷ்யாவின் கம்சட்காவில் 16 பேருடன் சென்ற Mi-8 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. கம்சட்கா ஒரு சுற்றுலா தலமாகும். இப்பகுதி மாஸ்கோவிற்கு கிழக்கே 6,000 கிமீ தொலைவிலும், அலாஸ்காவிற்கு மேற்கே 2,000 கிமீ தொலைவிலும் உள்ளது.