நாட்டில் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனைகளில் 57 சதவீத வளர்ச்சி. UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2019-20 இல் 12.5 பில்லியனில் இருந்து 2023-24 இல் 131 பில்லியனாக அதிகரித்துள்ளது. ஃபோன் பே மற்றும் கூகுள் பே ஆகியவை UPI பரிவர்த்தனைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இரு நிறுவனங்களின் மொத்த சந்தைப் பங்கு 86 சதவீதமாகும். பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) வங்கித் துறை ரவுண்டப் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் இரட்டிப்பாகியுள்ளன. அதே நேரத்தில் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் ஆண்டுக்கு ஆண்டு 43 சதவீதம் குறைந்து வருகிறது.