பொகோடா: காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்த குழந்தைகளுக்கு கொலம்பியா சிகிச்சை அளிக்கும். கொலம்பிய இராணுவ மருத்துவமனை சிகிச்சை வசதியை வழங்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பலதரப்பு விவகார அமைச்சர் எலிசபெத் டைலர் ஜே, காயமடைந்த குழந்தைகள், அவர்களது குடும்பத்தினருடன் கொலம்பியாவுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று கூறினார். அதே சமயம், எத்தனை குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுவார்கள், எவ்வளவு காலம் சிகிச்சை அளிக்கப்படும் என்பதை அவர்கள் வெளியிடவில்லை.
பாலஸ்தீன குழந்தைகளுக்கு ராணுவ மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். கொலம்பியாவில் உள்நாட்டுப் போரின் போது மருத்துவர்களின் அனுபவம் சிகிச்சைக்கு உதவும் என்றும் அவர் கூறினார். முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும் பாலஸ்தீனியர்களுக்கு இத்தகைய சிகிச்சையை வழங்கியுள்ளன.