குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) முன்னோக்கிய செயலாக்க நேரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பங்களின் செயலாக்கத்தை முடிக்க எதிர்பார்க்கும் நேரத்தை ஆன்லைனில் வெளியிடுவதாகக் கூறியது. இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களைச் செயல்படுத்த எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
செயலாக்க நேரங்களைப் புதுப்பிக்கும் குடியேற்ற திட்டங்கள்:
.Canadian Experience Class (Express Entry)
.Provincial Nominees Program (Express Entry and non-Express Entry)
.Federal Skilled Workers (Express Entry)
.Quebec Skilled Workers
.citizenship grants
.citizenship certificate (proof of citizenship)
.spouse or common-law partner living inside Canada
.spouse, common-law or conjugal partner living outside Canada
parents or grandparents
கடந்த அக்டோபரில் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், செயலாக்க நேரத்தைக் கணக்கிடும் முறையை மாற்றுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பச் செயலாக்க நேரத்தை ஐஆர்சிசி எவ்வாறு கணக்கிட்டு வாடிக்கையாளர்களுக்கு இதைத் தெரிவிக்கிறது என்பது குறித்த பரிந்துரைகள் அறிக்கையில் இருந்தன.
மேலும் தகவலுக்கு ஐஆர்சிசி இணையதளத்தைப் பார்க்கவும்.