மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளில் அவருக்கு தேசம் மரியாதை செலுத்துகிறது. வெளிநாடுகளில் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களும் காந்தி ஜெயந்தி அன்று தேசத்தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர். டெல்லி ராஜ்காட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வ தர்ம பிரார்த்தனை கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே வங்கதேசத்திலும் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நோகாலியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி ஆசிரமத்தில் அவரது பாரம்பரியத்தை போற்றும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.இலங்கையில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை நாடு நினைவு கூர்ந்தது.