84 ஆண்டுகளில் தெற்கு கலிபோர்னியாவில் கரையைக் கடக்கும் முதல் வெப்பமண்டலப் புயல் ஹிலாரி, கனடாவைத் தாக்கும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவின் மேற்கு பகுதி மிகவும் பாதிக்கப்படும் என்றும் புயலின் தாக்கம் செவ்வாய் மாலைக்குள் உணரப்படும் என்றும் கனடா சுற்றுச்சூழல் எச்சரித்துள்ளது.ஹிலாரி புயல் வடக்கே நகர்ந்து தெற்கு ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன் பகுதிகள் மற்றும் மத்திய மனிடோபாவில் பலத்த மழையைக் கொண்டுவரும்.
பீசி கடற்கரையில் லேசான மழையும், தெற்கு ஆல்பர்ட்டாவில் ரெட்டீர் வரை பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று கனடா சுற்றுச்சூழல் கூறியது. காட்டுத்தீ புகையால் மூடப்பட்ட கம்லூப்ஸ் மற்றும் கெலோவ்னாவில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.ஹிலாரி சூறாவளி ஞாயிற்றுக்கிழமை தெற்கு கலிபோர்னியாவில் கரையைக் கடந்தது. புயலால் லட்சக்கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர். பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.